அசத்தல் மாடித்தோட்டம்

 ஹரிக்குமாரின் அசத்தல் மாடித்தோட்டம்


தனது வீட்டு மாடியில் மிகவும் அருமையான முறையில் மாடித்தோட்டம் அமைத்து அசத்தி வருகிறார் திரு.ஹரிக்குமார் அவர்கள்.



இலாலாப்பேட்டையில் தனது வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் அழகிய பூச்செடிகள் அனைத்தையும் காண்போர் வியக்கும் வண்ணம் அமைத்து அழகாக பராமரிப்பு செய்து வருகிறார்.



அவரிடம் கேட்டபோது நான்  பந்தல் அமைக்கும் பணியை செய்து வருகிறேன். எனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஓய்வு நேரங்களை பயனுள்ள வகையில் கழிப்பதற்காகவும் மன மகிழ்ச்சிக்காகவும் இந்த மாடித் தோட்டத்தை அமைத்து பராமரித்து வருகிறேன். 



எனக்கு உறுதுணையாக எனது மனைவி மற்றும் இரு மகன்கள் உதவி செய்து வருகின்றனர்.



சரண்.ஹ


எனது வீட்டு மாடித் தோட்டத்தில் கத்தரிக்காய், தக்காளி உருளைக்கிழங்கு,பீட்ரூட், கேரட் ,முள்ளங்கி, புடலங்காய் , பீர்க்கன் மிளகாய், கொத்தமல்லி, புதினா என பல வகையான காய்கறிகளை பயிரிட்டுள்ளேன்.




மேலும் அழகுச் செடிகள் மூலிகை தாவரங்களை வளர்த்து வருகின்றேன்.





எனது தோட்டத்தில் விளையும் காய்கறிகளை என் அண்டை வீட்டாருக்கும் கொடுத்து மகிழ்கின்றேன்.


இதே போல் ஒவ்வொருவரும் தனது வீட்டில் வீட்டு தோட்டம் , மாடி தோட்டம் அமைத்து தன் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்யலாம் என்றார்.




நஞ்சில்லா காய்கறிகளை உண்டு மகிழலாம் என்று நெகிழ்ச்சியாக கூறினார்.





பாண்டிச்சேரி ஒரு முறை வேலைக்கு சென்ற போது அங்கு அமைத்திருந்த மாடித்தோட்டம் என்னை வெகுவாக கவர்ந்தது.அதைவிட சிறப்பான மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என்று அன்றே என் மனதில் தோன்றியது.




தன் தாய் தந்தையர் ஒரு இயற்கை விவசாயி அவர்களே தனது வழிகாட்டி என்று மிகவும் பெருமையாக கூறினார்.



இவரைப் போல நாமும் தோட்டம் அமைத்து நஞ்சில்லா காய்கறிகளை உண்ண முயற்சி செய்வோம்!


வீட்டு மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்...

ஹரிக்குமார் : 99765 68949

8825485823

நன்றி

மரகதம் நர்சரி கார்டன்

சிந்தலவாடி

கரூர் மாவட்டம்

Comments

Popular posts from this blog

மரகதம் நர்சரி கார்டன்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

இராசி நட்சத்திரங்களுக்கான அதிஷ்ட மரங்கள்