Posts

Showing posts from October, 2022

அக்கரகாரம் மூலிகை

 உணவே மருந்துமூலிகைகள் அக்கரகாரம் மூலிகை பயன்கள் அக்கரகாரம் அக்கரகாரம் என்னும் இந்த மூலிகைச் செடி கருமண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. இந்த மூலிகை இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு கொண்டது. இதன் இலைகள் 15 செ.மீ. நீளமாகவும், முதலில் இளம்பச்சை நிறத்திலும், பின்பு ஊதா நிறத்திற்கும் மாறிவிடும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் புள்ளிகளுடன் காணப்படும். ஒவ்வொரு செடியிலும் சுமார் 7-10 பூக்கள் இருக்கும். இது சல்லி வேர் அமைப்பை கொண்டது. இதன் வேர்கள் 5 – 10 செ.மீ. நீளமாக இருக்கும். இதற்கு அக்கார்கரா, அக்கரம் முதலான வேறு சில பெயர்களும் உண்டு. அக்கரகாரம் மூலிகை மருத்துவ பயன்கள் அக்கரகாரத்தின் வேர் மற்றும் பட்டை மருந்துப் பொருட்கள் செய்ய பயன்படுகிறது. இந்திய மருத்துவத்தில் ஆம்பர் மெழுகு மருந்துப் பொருள் செய்யப் பயன்படுகிறது. இது வாதநோய், மற்றும் காக்காய் வலிப்பு நோய்க்கும் உடனடி நிவாரணமாகும். இது மூளையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அக்கரகாரம் மூலிகையின் மருத்துவ பயன்கள் பல் பிரச்சனைகள் தீரும் சிறிது அக்கரகாரத்தை அரைத்து, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வை...