மா சாகுபடி முறை
எளிய இயற்கை முறையில் மாம்பழ சாகுபடி செய்வது எப்படி? மா சாகுபடி முறை மரகதம் நர்சரி கார்டன் உலகில் மா ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மா வெப்ப மண்டலத்தில் விளையும் பயிர். மற்ற மண் வகைகளை விட செம்மண் பூமி மா சாகுபடிக்கு ஏற்றது. செம்மண் பகுதிகளில் விளையும் மாம்பழங்களின் சுவை நன்றாக இருக்கும். மா வில் பல ரகங்கள் இருந்தாலும். பங்கனபள்ளி, இமாம்பசந்த், அல்போன்சா ஆகியவை மிக பிரபலமானவை. ஏற்றுமதியில் அதிக பங்களிப்பு உள்ளவை. மா பெரும்பாலும் ஒட்டு கட்டிய செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பல முறைகளில் ஒட்டு கட்டினாலும் சமீபத்திய மற்றும் பிரபலமான முறை ஆப்பு ஒட்டு முறை. இதை நாமே எளிதாக கட்டிக் கொள்ளலாம். ஒரே செடியில் சுமார் இருபத்தைந்து வகைகளை ஒட்டு கட்டலாம். இம் முறையில் சீசன் ஆரம்ப முதல் கடைசி வரை தொடர்ந்து பல வகையான மாங்கனிகள் கிடைக்கும். நடவு முறையில் தற்பொழுது இரு விதங்கள் நடைமுறையில் உள்ளன. அடர்நடவு மற்றும் சாதாரண நடவு முறை. அடர்நடவு முறையில் ஏக்கருக்கு 650 செடிகள் வரை நடப்படுகிறது. சாதாரண நடவு முறையில் 40 செடிகள் போதுமானதாகும். மா ...